சிங்கப்பூரில் வரும் செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் முiஅ துழபெ-ரn சந்திக்கவுள்ள நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து 3,000 பத்திரிக்கையாளர்கள் வருகை தந்துள்ளனர். north Korea america president meet murder Tamil latest news
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் எதிர் வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்வதாக அறிவித்த ஒரு வாரத்தில், மீண்டும் அதே திகதியில் ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறுமென்று தற்போது அறிவித்தார்.
இந்த சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக வட கொரிய அதிபரின் சிறப்பு பிரதிநிதி கிம் யாங் சோல், அன்மையில் அமெரிக்கா சென்றார்.
டிரம்பை சந்தித்த அவர், கிம் ஜாங் உன் சார்பில் ஒரு கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார்.
கடந்த 18 ஆண்டுகளின் பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகை சென்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோனை சந்தித்துப் பேசுவது உறுதி என உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது வட கொரியாவின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை உருவாக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் வரும் செவ்வாயன்று அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபரும் சந்திக்கவுள்ள நிலையில், உலகம் முழுவதிலுமிருந்து 3,000 பத்திரிக்கையாளர்கள் சிங்கபூருக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த சந்திப்பையொட்டி வடகொரிய அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணியை தொடங்க வேண்டும் என வடகொரியாவுக்கான ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடகொரியாவில் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்களை கவனித்து வரும் ஐ.நா. சிறப்பு அதிகாரியான தாமஸ் ஓஜா குயின்டனா, ஜெனீவாவில் நிருபர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கைது செய்யப்பட்ட மூன்று அமெரிக்கர்களை வடகொரியா கடந்த மாதம் விடுதலை செய்தது வரவேற்கத்தக்க விடயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ளார்.
வட கொரிய ஜனாதிபதி தனது பாதுகாப்பு கருதி இராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
north Korea america president meet murder Tamil latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
Tamil News Group websites