இராணுவத்தினரை தண்டிக்க இடமளியேன் – குற்றங்களை ஏற்கவும் மாட்டேன்

0
683
university higher education raging action police wijayadasa jajapaksha

இராணுத்தினரை தண்டிக்கவோ சர்வதேச குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளவோ எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். cant accept international crime security Lankan army latest news

பாராளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வினவிய கேள்வி களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இராணுவ தண்டிப்புக்கு கதவுகளை திறந்துவிட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இன்று எம்மை குறைக்கூறுவது வேடிக்கையானது.எமது ஆட்சியில் ஒருபோதும் இராணுவ காட்டிக்கொடுப்பு இடம்பெற்றவில்லை.

நான் நீதி அமைச்சராக இருந்த போது ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் ஜேர்மனிய இராஜதந்திரிகள், பிரதிநிதிகள் என்னை சந்தித்து கலப்பு நீதிமன்றம் அமைக்க கேட்டதுடன், இராணுவத்தை விசாரிக்கும் நீதிமன்ற பொறிமுறை ஒன்றினை எவ்வாறு உருவாக்கப்போகின்றீர்கள், எப்போது, எந்த அடிப்படையில் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் கேள்விகளை கேட்டனர்.

எனினும் நாம் இராணுவத்தை ஒருபோதும் தண்டிக்கப் போவதில்லை. காட்டிக்கொடுக்க போவதில்லை. இராணுவத்தை கையாளும் விதத்தில் தெரேசா மே என்ன யுக்திகளை கையாண்டாரோ அதே கொள்கையை நாமும் பின்பற்றப்போகின்றோம் என்பதை உறுதியாக தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
cant accept international crime security Lankan army latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites