ranked worlds peaceful country list nstitute Economics Peace Australia
உலக அளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மிகவும் பின்தங்கிய இடம் கிடைத்துள்ளது.
உலகின் அமைதியான நாடுகள் தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பு (Institute of Economics and Peace, Australia) என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 163 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகளின்படி உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தேர்வாகியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது.
முதல் 5 இடங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், இந்தியாவுக்கு 137-வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா 141-வது இடத்தில் இருந்தது.
இந்தியாவில் பல்வேறு விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை காரணமாக கொடூர குற்றங்கள் குறைந்து வருவதாகவும், அதனால் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமைதியான நாடுகளின் பட்டியலில் சிரியா கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடங்களில் ஆஃப்கனிஸ்தான், தெற்கு சூடான், ஈராக், சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.
ranked worlds peaceful country list nstitute Economics Peace Australia
More Tamil News
- காலா! வருவாரா? மாட்டாரா? – கர்நாடக ரசிகர்கள் கவலை!
- சிறுமியை கடத்த முயற்சி – கட்டி வைத்த உதைத்த பொதுமக்கள்!
- நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி – கீர்த்தனா!
- பாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு!
- மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?
- காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
- கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!
Tamil News Group websites :