Annemasse நகரில் இருந்து ஜெனீவா செல்வதற்காக ஐந்து வயது சிறுவன் ஒருவன் பேரூந்து ஒன்றில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.5 year old Child travel Geneva alone
Haute-Savoie மாவட்டத்தின் Annemasse நகரில் இருந்து 5 வயதான சிறுவன் ஒருவன் பேருந்தில் ஏறியுள்ளான். பேரூந்து சுவிட்சர்லாந்தின் எல்லையை கடந்ததன் பின்னரே சிறுவன் தனியாக பயணிக்கும் விடயம் சாரதிக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக சுவிஸ் நாட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
இதற்கிடையில் குறித்த சிறுவனை காணவில்லை என தேடுதலில் ஈடுபட்ட அவனது பெற்றோர்கள், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் சுவிட்சர்லாந்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து, சிறுவனின் பெற்றோர்கள் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.
அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளை தொடர்ந்து காலை 11.30 மணி அளவில் சிறுவன் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.
**Most Related Tamil News**
- மதிப்புமிக்க நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ்!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!