கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting
இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ட்ரூடோ குறித்த சந்திப்பின்போது கூறியுள்ளார்.
மக்ரோன் எப்போதும் தமது நண்பர் எனவும் பிரான்ஸ் மற்றும் கனடாவிற்கு இடையில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதிப்பதற்கு இந்த சந்திப்பு மிகவும் உதவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
G7 திட்டத்தின் பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளும் வெளிப்படையாக ஒன்றிணையவுள்ள நிலையில் மேலும் சில பெரிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்பின்னர், கனடிய பிரதமரின் கருத்துக்களுக்கும் வரவேற்புக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தமது ஆதரவு மற்றும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும், G7 திட்டத்திற்கான பேச்சுவார்த்தை தற்சமயம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!