பல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்!

0
1408

அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal wedding pregnant)

மேகன் மெர்க்கலின் வயிறு சற்று பெரிதாக இருக்கும் நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு, மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார்,அதுவும் அவரது வயிற்றில் இருப்பது இரட்டை குழந்தைகள் என கூறியுள்ளது.மேலும், 588 ஆண்டுகளில் முதல் ராயல் இரட்டை குழந்தைகள் என அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் ஆகிய இருவரும் ரகசியமாக கருத்தரிப்பு மையத்திற்கு சென்றுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இது பொய்யான தகவல் எனவும் மெர்க்கல் கர்ப்பமானது உண்மையென்றால் அது அரசகுடும்பத்தால் முறையாக அறிவிக்கப்படும், அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் முதல் முறையாக சார்லஸின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மெர்க்கல் கலந்துகொண்டபோது அவரது வயிறு பெரியதாக இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tag: meghan markle baby pregnant prince harry royal wedding pregnant