தவறான வீடியோவை வெளியிட்டு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை

0
787

பிரபல நடிகையும் சமூக சேவகியுமான சபனா ஆஸ்மி அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டு நன்றாக வாங்கி கட்டி கொண்டார் .(Shabana Azmi Apologies Indian Railway Ministry Latest Gossip  )

அதாவது தனது டிவிட்டரில் இந்திய ரயில்வே கேட்ரிங் சர்விஸ் சமைக்கும் பாத்திரங்களை கழிவு நீரில் கழுவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்திய ரயில்வே சினிமாவின் லட்சணத்தை பாருங்கள் என டுவிட்டி இருந்தார் .

இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து ரயில்வேதுறை அமைச்சர் பியூச் கோயல், நடிகை சபனா ஆஸ்மியிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த வீடியோ மலேசியாவில் உள்ள ரெஸ்டாரெண்டில் அதன் ஊழியர்கள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்த வீடியோ என்றும், அந்த வீடியோவுக்கும் இந்திய ரயில்வே துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Shabana Azmi Apologies Indian Railway Ministry Latest Gossip
Photo Source :tamil.webdunia.com

இதனை ஏற்றுக்கொண்ட சபனா ஆஸ்மி தனது தவறுக்கு வருந்துவதோடு, அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தேசிய ஒருமைப்பாட்டு குழுவின் உறுப்பினராகவும், இந்தியாவின் நல்லெண்ண தூதராகவும் இருந்துள்ள நடிகை சபனா ஆஸ்மி இதுபோன்ற உறுதி செய்யப்பட்ட தவறான வீடியோவை பதிவு செய்யலாமா? என்று டுவிட்டர் பயனாளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Shabana Azmi Apologies Indian Railway Ministry Latest Gossip