சவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் : காலாவிற்கு கிடைத்த பெருமை..!

0
986
Saudi Arabia first Indian film released Kaala,Saudi Arabia first Indian film released,Saudi Arabia first Indian film,Saudi Arabia first Indian,Saudi Arabia first

உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு ”காலா” படம் வெளியானது. சென்னை மற்றும் புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.(Saudi Arabia first Indian film released Kaala)

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ”காலா” திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதேபோல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

சென்னையில் ரஜினியின் ”காலா” படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகா தவிர உலகெங்கும் வெளியாகியுள்ள ”காலா” படம், சவுதி அரேபியாவிலும் தற்போது வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது.

1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது. பிளாக் பாந்தர் – ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சவுதி அரேபியாவில் ”காலா” படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை ”காலா” படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!

Tags :-Saudi Arabia first Indian film released Kaala

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 07-06-2018