காரிற்காக குழந்தையை திருடிய கொள்ளையன்!

0
641
robber stole car withh baby Bois-d'Arcy France

Bois-d’Arcy இல் குழந்தையுடன் சேர்ந்து காரை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. robber stole car withh baby Bois-d’Arcy France

கணவனும், மனைவியும் அவர்களின் குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது இவர்களது காரை வழி மறித்த சில இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ் இளைஞர்கள் நிறைந்த போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில், குறித்த இரு தம்பதிகளும் காரை விட்டு கீழே இறங்கி வழிவிடுமாறும், இல்லையென்றால் காவல்துறையினரை தாம் அழைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர்களில் ஒருவனான 20 வயது இளைஞன், திடீரென அவர்களின் Peugeot 106 ரக காரை திருடிக்கொண்டு சென்றுள்ளான். ‘என் மகன் உள்ளே இருக்கின்றான்’ என அப்பெண் சத்தமாக கத்தியுள்ளார். ஆனால் குறித்த கொள்ளையர் அதை மறுத்துவிட்டு காருடன் தப்பிச்சென்றுள்ளான். ஏனையவர்களும் தப்பி ஓடியுள்ளனர்.

உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து குறித்த கார் சில மீட்டர்கள் இடைவெளியில் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை காரிற்குள் இருந்து பாதுகப்பாக மீட்கப்பட்டது. பின்னர் மறுநாள் நண்பகலில் கொள்ளையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**