இந்தியாவில் கால் பதிக்க விரும்பும் கட்டார் ஏர்வேஸ்!

0
820
Qatar Airways like move India Qatar Tamil news

Qatar Airways like move India Qatar Tamil news

இந்தியாவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்க உள்ளதாகக் கட்டார் ஏர்வேஸ் தலைவர் அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக விரைவில் விண்ணப்பம் அளிக்க உள்ளதாகக் கட்டார் ஏர்வேஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிறுவனத்தின் இயக்குனரவையின் தலைவராக இந்தியரே இருப்பார் எனவும் பெரும்பாலான இயக்குநர்களும் இந்தியர்களாகவே இருப்பார்கள் என்னும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்னாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் 49விழுக்காடு வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Qatar Airways like move India Qatar Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites