உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!

0
732
Australia Tamil News, Aussie News, Tamil News

மெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence

கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்க வைக்கவுள்ளதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதையடுத்து உடனடியாக புறப்பட்ட இடத்திற்கு திரும்பிய விமானம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் Manodh Marks-உம் கைதுசெய்யப்பட்டார்.

இலங்கையிலிருந்து கல்விகற்பதற்காக வந்து டண்டினோங் பகுதியில் வாழ்ந்து வந்த Manodh Marks, ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாக ஏற்பட்ட உளவியல் பாதிப்பினால் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்ட Manodh Marks-க்கு 12 வருட சிறைத்தண்டனை வழங்கி County Court இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில் 9 ஆண்டுகளை அவர் கட்டாயம் சிறையில் கழிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.