நியூஸிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகினார் ஹெசன்

0
492
New Zealand Head Coach Mike Hesson resigns news Tamil

நியூஸிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் உலகக்கிண்ண போட்டிகளுக்கு இன்னும் ஒரு வருடம் எஞ்சியுள்ள நிலையில் திடீரென பதவி விலகியுள்ளார்.

இவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் தன்னை நிரூபித்துள்ளார். இவருக்கான ஒப்பந்தக்காலம் மேலும் ஒரு வருடம் எஞ்சியிருக்கும் நிலையில், இவர் பதவி விலகியுள்ளமை நியூஸிலாந்து ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தனது பதவி விலகல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மைக் ஹெசன், கிரிக்கெட்டிலிருந்து சிறிய இடைவேளை எடுக்க விரும்புவதாகவும், தனது மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆறு வருட ஒப்பந்தத்தில் நியூஸிலாந்து அணியுடன் இணைந்திருந்த மைக் ஹெசன், அவரது நூறு சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பதை கிரிக்கெட் சபை மற்றும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நியூஸிலாந்து அணியை 2015ம் ஆண்டு முதன்முறையாக உலக்ககிண்ண இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதுமாத்திரமின்றி இறுதியாக தங்களது சொந்த மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடிய நியூஸிலாந்து அணி 2 தொடர்களில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது.

மைக் ஹெசனுக்கு மேலுமொரு வருடம் வாய்ப்பு இருக்கும் போதும், நியூஸிலாந்து அணியை இனியும் வழிநடத்தக்கூடிய தகுதி தன்னிடம் இருப்பதாக தெரியவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

<<Tamil News Group websites>>

New Zealand Head Coach Mike Hesson resigns news Tamil, New Zealand Head Coach Mike Hesson resigns news Tamil