விராட் கோஹ்லிக்கு கிடைத்த கௌரவம்! : மீண்டுமொரு புதிய விருது

0
588
polly umrigar award 2018 news Tamil

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பொலி உம்ரிகார் விருது வழங்கப்படவுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் பொலி உம்ரிகார் விருது, இந்திய கிரிக்கெட்டில் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும்.

இந்நிலையில் 2017-18ம் ஆண்டுக்கான அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விராட் கோஹ்லிக்கு வழங்கப்படவுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் பங்களி்ப்பில் நடைபெறும் இந்த விருது விழா, எதிர்வரும் 12ம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளதுடன், விருதை பெறும் விராட் கோஹ்லிக்கு பரிசாக கிண்ணம் மற்றும் 15 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

விராட் கோஹ்லி இதற்கு முன்னர் பொலி உம்ரிகார் விருதினை 2011-12, 2014-15 மற்றும் 2015-16ம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.

இதேவேளை சிறந்த சர்வதே மகளிர் வீராங்கனையாக ஹர்மன்பிரீட் சிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

polly umrigar award 2018 news Tamil, polly umrigar award 2018 news Tamil