ஈட்டோபிக்கோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

0
557
Etobicoke shooting

ஈட்டோபிக்கோவில் நேற்று பின்னிரவு வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Etobicoke shooting

பேர்மிங்ஹம் ஸ்ட்ரீட் மற்றும் பிரட்டெம் பார்த் பகுதியில், Islington Avenue மற்றும் Lake Shore Boulevard இல் நள்ளிரவுக்கு சற்று முன்பாக 11.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கு ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் மோசமான காயங்கள் காரணமாக சிகிச்சைகள் பலனின்றி பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த நபர் உயிரிழந்ததை அடுத்து, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

அதிகாரிகள் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.