பிரான்ஸில், நேற்று காலை நிலவிய மிக மோசமான காலநிலையால் இல்-து-பிரான்ஸ் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. France climate change -transport ban
கடந்த சில நாட்களாக பொழிந்துவரும் இடிமின்னல் மற்றும் கடும் மழையைத் தொடர்ந்து நேற்று காலை கடுமையான பனிப்பொழிவும் இடம்பெற்றது. இதனால் வீதிகள் எல்லாம் வழுக்கும் தன்மையை அடைந்தது. இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் தன்மை கொண்டுள்ளதால், மெதுவாக வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. இதனால் போக்குவரத்து தடை மற்றும் தாமதம் அடைந்தது.
மேலும், வீதி கண்காணிப்பாளர்களான Sytadin நிறுவனம், 500 Km தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. அதேவேளை, இல்-து-பிரான்சுக்குள் சீரற்ற காலநிலை காரணமாக வெவ்வேறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
Attainville நகரம் முழுவதும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாகவும், வீதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த காலநிலை இவ்வாரம் முழுவதும் தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- மதிப்புமிக்க நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ்!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!