ரணிலின் சகோதரரின் TNL தொலைக்காட்சியை முடக்கிய மைத்திரியின் சகோதரர்

0
334
tamilnews TNL TV transmission tower Polgahawela sealed TRC

(tamilnews TNL TV transmission tower Polgahawela sealed TRC)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரான ஷான் விக்ரமசிங்கவின் ரீ.என்.எல் தொலைக்காட்சி சேவையின் பொல்கஹவெல ஒளிபரப்பு கோபுரம் சட்டரீதியாக முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்ட நிலையிலும் தமது தொலைக்காட்சி சேவையின் ஔிபரப்புக் கோபுரம் சீல் வைத்து மூடப்பட்டதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து டி.ஆர்.சி.யின் கட்டணங்களையும் செலுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையை கண்டிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த தொலைக்காட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்து ஒரு செய்தி அறிக்கையை ஒளிபரப்பியதால் கோபுரம் சீல் வைத்து முடக்கப்பட்டதாக ஒரு செய்தி வௌியாகியுள்ளது.

100 நாள் வேலைத்திட்டம் பற்றி ஜனாதிபதி வௌியிட்ட கருத்து தொடர்பாக அந்த தொலைக்காட்சியின் செய்தி அறிக்கையின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதுவே பிரச்சினைக்கு மூல காரணமாக அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்தநிலையில், ஒளிபரப்பு நிலையத்தின் உபகரணங்களையும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எடுத்துச் செல்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டு மொத்த தொலைக்காட்சி சேவையும் முடக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது

இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது கவனிக்கத்தக்கது.

(tamilnews TNL TV transmission tower Polgahawela sealed TRC)

More Tamil News

Tamil News Group websites :