பாகிஸ்தான் அஷார் அலி மற்றும் அசாட் சபீக் ஆகியோருக்கு கவுண்டியில் விளையாடட வாய்ப்பு

0
570
Pakistani players playing county cricket news Tamil

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களான அஷார் அலி மற்றும் அசாட் சபீக் ஆகியோர் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெட் ரென்ஸோவ் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோருக்கு பதிலாக சமரெஷ்ட் மற்றும் சர்ரே ஆகிய இரண்டு கவுண்டி கிரிக்கெட் கழகங்கள் குறித்த இருவரையும் ஒப்பந்தம் செய்வற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து சென்று டெஸ்ட் மற்றும் இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடி வருகின்றது.

நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வலுவிழந்த துடுப்பாட்டத்தின் காரணமாக தொடரின் வெற்றியை தவறவிட்டது.

இந்நிலையில் அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையை தரம் உயரச் செய்வதற்கு கவுண்டி கிரிக்கெட் உதவும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஷார் அலி மற்றும அசாட் சபீக் ஆகியோரின் கவுண்டி வாய்ப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர்,

“அணியின் இரண்டு வீரர்கள் மீதான அவதானத்தை கவுண்டி கிரிக்கெட் செலுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இதுவரை நிகழாத போதும், அஷார் அலி மற்றும் அசாட் சபீக் ஆகியோர் இருபதுக்கு-20 தொடரில் விளையாட மாட்டார்கள் என்பதால், கவுண்டி அணிகளிடம் சிறிய எதிர்பார்ப்புகள் இருப்பதாக தெரிய வருகின்றது.

எனினும் அதிர்ஷ்டவசமாக குறித்த இருவருக்கும் கவுண்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமானால் அதனை நாங்கள் வரவேற்கின்றோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(Pakistani players playing county cricket news Tamil)

<<Tamil News Group websites>>