வானத்திலிருந்து மழை போல பொழிந்த மனித மலம்!

0
737
canada poo rain

வானத்திலிருந்து மனித மலம் மழை போல பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. canada poo rain

பிரிட்டிஷ் கொலம்பியாவின், கெலோவ்னாவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முகம்கொடுத்துள்ள ஒருவர் தெரிவிக்கும்போது தான் காருக்குள் இருந்ததாகவும் இதன் போது காரின் மேல் உள்ள சன் ரூப்பின் வழியாக காருக்குள் மலம் நிரம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காருக்குள் திரவ மலம் நிரம்பியதால் வந்த வாசனையால் , தான் உடனடியாக வாந்தியெடுத்ததால் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் சுகயீனமுற்றதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட நிலைக்கு காரண விமானத்திலிருந்து கொட்டிய மலக்கழிவென அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த தருணத்தில் விமானமெதுவும் அப்பகுதியூடாக பறக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.