மலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது!

0
795
Threatening shoot Malaysian PM mahathir, malaysia tami news, malaysia, malaysia news, mahathir,

{ Threatening shoot Malaysian PM mahathir }

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதைச் சுடப் போவதாக மிரட்டி Facebookஇல் பதிவு செய்யப்பட்ட கருத்துகளின் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கம் சாராத முஸ்லிம் அமைப்பான பெக்கிடாவின் (Pekida) சமூக வலைத்தளப் பதிவு குறித்து சென்ற மாதம் 31ஆம் திகதி புகார் கிடைக்கப்பெற்றதாக மலேசியக் காவல்துறைத் தலைவர் ஃபாஸி ஹாரூன் கூறியுள்ளார்.

அதன் தொடர்பில், பெக்கிடாவின் அமைப்பின் உறுப்பினரான 38 வயது ஆடவர் சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்குக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், தமது Facebook கணக்கைப் பொறுப்பற்றவர்கள் ஊடுருவி விட்டனர் என்று சந்தேக நபர் கூறியுள்ளார்.

விசாரணைக்காக, அவர் வரும் புதன்கிழமை வரை தடுத்து வைக்கப்படுவார் என்று காவல்துறைத் தலைவர் திரு. ஃபாஸி ஹாரூன் கூறியுள்ளார்.

Tags: Threatening shoot Malaysian PM mahathir

<< RELATED MALAYSIA NEWS>>

*ஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்!

*நண்பனை சுட்டுவீழ்த்திய வயதானவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்!

*துணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்! மகாதீர்

*100 நாள் வாக்குறுதிகளை புறக்கணியுங்கள்; புதிய அரசுக்கு வழி விடுங்கள்!

*கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி!

*மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி!

*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!

*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!

*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

<< RELATED MALAYSIA NEWS>>