விபத்தில் பலியான டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் : துக்கம் தாங்காமல் மகனைக் கொன்று மனைவி தற்கொலை..!

0
795
TV anchor Chandan wife kills son commits suicide,TV anchor Chandan wife kills son commits,TV anchor Chandan wife kills son,TV anchor Chandan wife kills,TV anchor Chandan wife

கன்னட டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சந்தன், வீதி விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவரது  மனைவி, தன் மகனைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.(TV anchor Chandan wife kills son commits suicide)

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

கர்நாடக தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் சந்தன். இவருக்கு மீனா என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகனும் இருந்தனர்.

சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் சந்தன் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி மீனா தீவிர மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம், தூங்கிக் கொண்டிருந்த தன் மகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மீனா, தானும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

அவ்வேளை, மீனாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் சுரேஷ், தன் தங்கை உயிருக்கு போராடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரையும், அவரது மகனையும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

அங்கு அவர்களைச் சோதித்த போலீசார் மீனாவின் மகன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், அபாய கட்டத்தில் இருந்த மீனாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், சந்தன் மற்றும் அவரது மகன், மனைவி அடுத்தடுத்து உயிரிழந்ததையடுத்து, அவர்களது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

மெர்சலுக்கு கிடைத்த புதிய கௌரவம்..!

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..!

காலா படத்தை தொடர்ந்து விஸ்வரூபம்-2 படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!

இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர் : இசைஞானிக்கு புகழ்மாலை சூட்டிய குடியரசுத் தலைவர்..!

அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!

போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!

மீண்டும் சினிமாவில் களமிறங்க தயாராகும் பாலியல் சர்ச்சை நடிகை..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-TV anchor Chandan wife kills son commits suicide

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 04-06-2018