யுத்த காலத்தில் மைத்திரிபால ஜனாதிபதியாக இருந்தால், ஒரே அழைப்பில் பிரபாகரன் வென்றிருப்பார் – மஹிந்த பெருமிதம்

0
435
tamilnews Maithripala power civil war Prabhakaran win war single call

(tamilnews Maithripala power civil war Prabhakaran win war single call)

உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்திருந்தால், ஒரேயொரு தொலைபேசி அழைப்பின் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் யுத்தத்தை வெற்றிருப்பார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று முன்னாள் ஜனாதிபதியின் இந்த கருத்தை பிரசுரித்துள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் இதுவரையில் நடைபெறாத ஆட்சியே தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

மைத்திரி சிறிசேன ஜனாதிபதியாக ஆட்சி பீடமேறியவுடன் ஐ.தே.க தலைவர் ரணிலை பிரதமராக்கினார்.

இப்போது அந்த பிரதமரை மாற்றிக் கொள்ள முடியாத சிக்கலான சூழ்நிலையைச் எதிர்கொண்டுள்ளார்.

எனினும், நாட்டுக்கு முறையான தலைமைத்துவம் அவசியம், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தீர்க்கமான முடிவுகள் தற்போது எடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

இந்த விடயம் தொடர்பாக தாம் ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

(tamilnews Maithripala power civil war Prabhakaran win war single call)

More Tamil News

Tamil News Group websites :