(tamilnerws ranil maithreepala battle kottabaya political enter)
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி குறிப்பிடத்தக்க தோல்வியை எதிர்கொண்டது.
இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசியல் ரீதியான கூட்டணியை பேணியமையே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து தோல்வியடைந்தமை தொடர்பாக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, அனைத்து கட்சிகளும் உட்கட்சி மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
எந்த கட்சியும் உட்கட்சி மோதல்களால் பாதிக்கப்படவில்லை என யாரும் உறுதியாக கூற முடியாது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் அதன் ஆரம்ப காலத்திலிருந்து இந்த பிரச்சினையால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மாதுளுவாவே சோபித்த தேரரின் நினைவு தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஆட்சியேற்ற போது நடைமுறைப்படுத்தப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டமானது முட்டாள்தனமாக செயற்பாடு என்று குற்றம்சுமத்தினார்.
அதனை யார் தயார் செய்தார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக ஐக்கிய தேசிய கட்சியைச் சார்ந்தவர்கள் பெரும் அதிருப்தியை வௌியிட்டனர்.
ஜனாதிபதியின் இந்த கருத்து தொடர்பாக பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் கூட்டணி கூட்டணி வைப்பதற்கு முயற்சிக்கிறார் என தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், தன்னை முன்னிலைப்படுத்தி இந்த குற்றச்சாட்டை ஜனாதிபதி தெரிவித்திருப்பது வருத்தத்திற்குரிய விடயம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
(tamilnerws ranil maithreepala battle kottabaya political enter)
More Tamil News
- கொலை செய்யப்பட்டாரா – தற்கொலை செய்து கொண்டாரா…..? பல கோணங்களில் பொலிசார் விசாரணை
- நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – ஜெயச்சந்திரன்
- அமெரிக்காவின் பொருளாதாரத் தடை வந்தால் வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது – சீனா
- ‘அக்னி 5’ ஏவுகணை சோதனை வெற்றி
- சுயலாபத்திற்காகவும், தலைமையை தக்கவைக்கவும் மலையக கட்சிகள் முயற்சிக்கின்றன – எஸ்.சதாசிவம்
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com