கனடா டி20 தொடரில் விளையாடும் இலங்கை வீரர்கள் இவர்கள்தான்!!! : முழுமையான அணி விபரம்…

0
703
global t20 league canada squad news Tamil

கனடாவில் ஆரம்பமாகவுள்ள கிளோபல் டி20 தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் விபரங்களை ஏற்பாட்டுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரங்களும் வெளியாகியுள்ளன.

இலங்கை அணிசார்பில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுரு உதான ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இணைக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் மொண்ட்ரியல் டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.

இதேவேளை இந்த போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஒருவருட தடைவிதித்திருந்த போதிலும், கனடா பிரீமியர் லீக்கில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச வீரர்கள் இணைந்து 5 அணிகளாக பங்கேற்கும் குளோபல் டி20 லீக் இம்மாதம் 28ம் திகதி முதல் ஜுலை 14ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

அணி விபரம் இதோ…!

 

<<Tamil News Group websites>>

global t20 league canada squad news Tamil, global t20 league canada squad news Tamil, global t20 league canada squad news Tamil