பிரபல கல்லூரியில் பெண்களுக்கு நடந்து வந்த அசிங்கங்கள் அம்பலமாகின!

0
644
Australia College Abuses

பிரபல கல்லூரியொன்றில் நடந்து வந்த அசிங்கமான காரியங்கள் வெளியுலகிற்கு தெரியவந்து பெரும் பரபரப்பை  அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ளது.Australia College Abuses

பாலியல் ரீதியான தாக்குதல்கள், ஆபசமான நடவடிக்கைகள் என மிரளவைக்கும் பல உண்மைகள் தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் நடக்கும் இத்தகைய அசிங்கமான நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகமொன்று மேற்கொண்டு வரும் விசாரணைகளின் ஊடாகவே இவை வெளிவந்துள்ளன.

வடக்கு அடிலேய்ட்டில் அமைந்துள்ள புனித. மார்க்ஸ் கல்லூரியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த அசிங்கங்கள் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளன.

மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகள், மது மற்றும் போதை என மாணவர்கள் விழுந்து கிடத்தல், பாலியல் சுற்றுலாக்கள் என பல்வேறு சம்பவங்களின் படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மாணவிகள் பலரும் தமக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தாக்குதல்கள் கொடுமைகள் என பலவற்றையும் பகிர்ந்துள்ளனர்.

இங்கு நீண்டகாலமாகவே இவ்வாறு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியொருவர் தான் போதையில் விழுந்து விட்டமையையும், அதன் பின்னர் ஆண்கள் பலர் தான் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நிலையில் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விபரித்துள்ளார்.

தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து, மாணவர்கள் செய்த கூத்து தொடர்பில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ் வெளிப்படுத்தல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.