அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா?

0
699
Umno chairperson contest Mohammed Hassan, malaysia tami news, malaysia, malaysia news, Mohammed Hassan,

{ Umno chairperson contest Mohammed Hassan }

மலேசியா: வரவிருக்கும் அம்னோவின் கட்சித் தேர்தலில் தேசிய தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி போட்டியிடவிருப்பதாகவும் துணைத்தலைவர் பதவிக்கு நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹாசானும் போட்டியிடவிருப்பதாக கூறப்படுகின்றது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஸாஹிட் ஹாமீடி நேற்று அனுப்பி விட்டதாக உத்துசான் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸாஹிட் ஹாமீடி தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் முதலாவது நபராக வேட்புமனுவை கட்சியின் தலைமையகத்திற்கு அவர் அனுப்பியிருப்பதாக அவரது பத்திரிக்கை செயலாளர் மேஜர் ஜெனரல் டத்தோ பாட்ஸ்லெட்டே ஒத்மான் மெரிக்கான் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி, அம்னோவின் மோசமான படுதோல்விக்கு பின்னர் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் விலகியுள்ளார். அதன் பின்னர், அக்கட்சியின் தேசியத் தலைவர் பதவியை இடைக்காலமாக டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி ஏற்றுக்கொண்டார்.

தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து அவர் இன்று சிரம்பானில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பார் என கூறப்படுகின்றது.

மேலும், கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் போட்டியிடவிருப்பதாகவும் உத்துசான் தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தலுக்கு பின்னர் கட்சியின் உறுப்பினர்களின் வலியுறுத்தல் மட்டும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு ஆகியவற்றின் காரணமாக அப்பதவிக்கு போட்டியிட தாம் முடிவெடுத்திருப்பதாக அவர் கூறியதாக அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அம்னோவிற்கு புதிய சுவாசத்தை வழங்குவதோடு அக்கட்சி தோற்றுவிக்கப்பட்டதற்கான அதன் அடிப்படை இலக்கிற்கு மீண்டும் கொண்டு செல்லும் நோக்கில் இந்த பதவிக்கு போட்டியிட முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான வேட்புமனுவை இன்று கட்சியின் தலைமைத்துவத்திற்கு அகப்பக்கம் வாயிலாக தாம் அனுப்பவிருப்பதாகவும் முகமட் ஹாசான் கூறியுள்ளார்.

இவ்விரு பதவிகளுக்கும் இதற்கு முன்னர் போட்டிகள் இருந்ததில்லை. ஆனால், பொதுத்தேர்தலின் தோல்வியின் காரணமாக அப்பதவிகளுக்கு போட்டிகள் இருக்க வேண்டுமென கட்சியின் சில தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து போட்டி நடத்தப்படவுள்ளது.

இந்த கோரிக்கையை முன்வைத்த தலைவர்களில் ஒருவரான கைரி ஜமாலுடின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளார்.

Tags: Umno chairperson contest Mohammed Hassan

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்!

*ஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்!

*நண்பனை சுட்டுவீழ்த்திய வயதானவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்!

*துணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்! மகாதீர்

*100 நாள் வாக்குறுதிகளை புறக்கணியுங்கள்; புதிய அரசுக்கு வழி விடுங்கள்!

*கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி!

*மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி!

*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!

*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!

*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

<< RELATED MALAYSIA NEWS>>