இன்றைய ராசி பலன் 02-06-2018

0
995
Today Horoscope 02-06-2018,tamil raasi palan,tamil horoscope,tamil astrology,daily horoscope,daily astrology,indraya raasi palan,இன்றைய ராசி பலன்

(Today Horoscope 02-06-2018 )

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 19ம் தேதி, ரம்ஜான் 17ம் தேதி,
2.6.18 சனிக்கிழமை தேய்பிறை, சதுர்த்தி திதி இரவு 3:20 வரை;
அதன் பின் பஞ்சமி திதி பூராடம் நட்சத்திரம் காலை 8:28 வரை;
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொது : சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயகர், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
அலைபேசி வழியில் ஆச்சர்யமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனை கட்டிக்குடியேறும் எண்ணம் மேலோங்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.

ரிஷப ராசி நேயர்களே !
தைரியத்தோடு செயல்பாட்டுச் சாதனைகள் படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர் பகை மாறும். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை கூடும். கடன் பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம் ராசி நேயர்களே !
தனவரவு திருப்தி தரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரும். கொடுக்கல்–வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

கடக ராசி நேயர்களே !
செல்வநிலை உயரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே !
இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உறவினர் பகை ஏற்படாதிருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கன்னி ராசி நேயர்களே !
வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன்கருதிப் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். வரவு திருப்தி தரும். அனுகூலச் செய்தி உண்டு.

துலாம் ராசி நேயர்களே !
முன்னேற்றம் கூட இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டிய நாள். நேசித்த சொந்தங்கள் பகையாகும். நிழல்போல கடன்சுமை தொட ரும். நேற்றைய பிரச்சினை இன்று நீடிக்கும். தந்தை வழி உறவில் விரிசல் ஏற்படும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
செலவுகள் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திருப்பம் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. வரவு திருப்தி தரும் இறைவழிபாட்டுச் சிந்தனை மேலோங்கும்.

தனுசு ராசி நேயர்களே !
பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் நாள். தொழில் வளர்ச்சி திருப்திதரும். ஆபரணம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அதிகாரிகளை அனுசரித்ததுச் செல்வது நல்லது. உடல் நலத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டு அகலும்.

மகர ராசி நேயர்களே !
நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

கும்பம் ராசி நேயர்களே !
எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் தொலைபேசி மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியமொன்று இனிதே முடியும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மீனம் ராசி நேயர்களே !
நன்மைகள் நடைபெறும் நாள். வாழ்க்கை துணை வழியே ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணவரவு உண்டு. பிறர் நலனில் அதிக அக்கரை காட்டுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

எமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

keyword:Today Horoscope 02-06-2018