ரசிகரை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த டோனி! : வைரலாகும் புகைப்படங்கள்!!!

0
540
Sudhir gautam Dhoni news Tamil

(Sudhir gautam Dhoni news Tamil)

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, இந்திய அணியின் பிரபல ரசிகரான சுதீர் கௌதமை வீட்டிற்கு அழைத்து விருந்து வழங்கியுள்ளார்.

சுதீர் கௌதம் இந்திய அணியின் பிரபல ரசிகர். இந்திய அணியின் எந்த ஒரு போட்டியையும் இவர் தவறவிட்டதில்லை. இந்திய அணியின் கொடியையும், சச்சினின் பெயர் மற்றும் இலக்கத்தையும் வரைந்துக்கொண்டு இந்திய அணிக்கு தனது ஆதரவை வழங்குவார்.

அதுமாத்திரமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாத்திரமின்றி சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடனும் நெருக்கமாக பழகக்கூடியவர்.

இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீfரித்து சில நாட்களே ஆகும் நிலையில், டோனி சுதீர் கௌதமை அழைத்து அவருக்கு பகல் உணவு விருந்து அளித்துள்ளார்.

இதனை புகைப்படம் எடுத்துள்ள சுதீர் கௌதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து டோனிக்கும், ஷாக்ஷிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>