ராமாயணத்தில் சீதா “டெஸ்ட் டியூப் பேபி “சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட உபி துணை தலைவர்

0
754
Lord Sita Test tube Baby U P Deputy CM Controversy

(Lord Sita Test tube Baby U P Deputy CM Controversy )

ராமாயணத்தில் வரும் சீதா தேவி, பூமியில் பிறந்தவர் என்று கூறப்பட்டாலும், இன்றைய தொழில்நுட்பத்தில் அவர் ‘டெஸ்ட் டியூப் குழந்தை’ போன்றவர் என்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

இதுத்தொடர்பாக மதுரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர்.,

‘இதழியல்துறை (பத்திரிக்கைதுறை) என்பது நவீன காலத்தில் தொடங்கியது அல்ல. மஹாபாராதம் நடந்த காலத்திலேயே இதழியல் இருந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இன்று அனைத்து விஷயங்களுக்கும் கூகுள் தளத்தைத்தான் நாம் தேடுகிறோம். ஆனால், புராணகாலத்திலேயே நடமாடும் கூகுள் இருந்தது. அது வேறுயாருமல்ல நாரத முனிவர்தான் நடமாடும் கூகுள் ஆவார்.

இவர் எந்த இடத்துக்கும் எளிதாகச் சென்று, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தகவலை வேகமாக பரப்பிவந்தார். ஏராளமான தகவல்களையும் கையில் வைத்திருந்தார். இவர்தான் முன்பு இருந்த கூகுள்.

ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், ராமனின் மனைவி சீதா தேவி பூமியில் இருந்து தோன்றியவர் என்கின்றனர். ஜனகர் நிலத்தில் கலப்பையில் உழும்போது சீதா தேவி குழந்தையாகக் கிடைத்தார்.

என்னைப்பொறுத்தவரை இப்போது இருக்கும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ போன்றுதான் அந்த காலத்தில் சீதா தேவி பூமியில் இருந்து பிறந்தார்’ என்று பேசினார்.

உ.பி.துணை முதல்வர் தினேஷ் சர்மாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News source : tamil.eenaduindia.com

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Lord Sita Test tube Baby U P Deputy CM Controversy