(ktm rc 250 special edition launched indonesia)
KTM இந்தோனேஷியா தனது புதிய RC 250 Special Edition மோட்டார்சைக்கிளை இந்தோனேஷியாவில் 2018 ஜகர்டா விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. KTM RC 250 SE, Special Edition மோட்டார்சைக்கிள் பெரும்பாலான அம்சங்களில் ஸ்டான்டர்டு மாடலில் இருப்பதை போன்று வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் வழக்கமான மாடலை போன்று இல்லாமல், எக்சாஸ்ட் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய மஃப்ளர் மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
KTM 250 மாடலில் வழங்கப்பட்ட இன்ஜின் RC 250 மாடலிலும் வழங்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் Bajaj KTM நிறுவனத்தின் சக்கன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது. KTM 250 மற்றும் RC 250 மாடல்கள் ஜப்பான் நாட்டில் 2015-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
KTM RC 250 SE மாடலின் பக்கவாட்டில் எக்சாஸ்ட் மவுன்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதேபோன்ற அம்சம் 2017-இல் அறிமுகம் செய்யப்பட்ட KTM RC 390 மாடலில் வழங்கப்பட்டிருந்தது குறி்ப்பிடத்தக்கது.
OUR GROUP SITES
ktm rc 250 special edition launched indonesia