ஜனாதிபதி வேட்பாளராக பீரிஸ்? – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு

0
460
president candidate gl peiris

(president candidate gl peiris)
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு, முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபஷ முடிவு செய்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே, மஹிந்த ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளார் என்று, அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, ராஜபக்ஷ குடும்பத்துக்குள் கோத்தாபய, பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர், தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே பேராசிரியர் ஜி.எல்.பீரிசை அதிபர் தேர்தலில் நிறுத்த மகிந்த ராஜபஷ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை