அடுத்த சீசனில் டோனி பஞ்சாப் அணியில்??? : பிரீதி ஜிந்தாவின் ஆசை!!!

0
588
preity zinta kings xi punjab future

(preity zinta kings xi punjab future)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீதி ஜிந்தா, தனது அணியில் யாரை இணைத்துக்கொள்ள விரும்புகிறார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு முறையும் முன்னணி வீரர்களை கைவசப்படுத்தும் பஞ்சாப் அணியால் இதுவரை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் டோனியை பஞ்சாப் அணிக்கு எடுக்க விரும்புவதாகவும், ஆனால் என்ன செய்தாலும் அவரை வாங்க முடியாது எனவும் பிரீதி ஜிந்தா புலம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரீதி ஜிந்தா, “எங்கள் அணிக்கு எப்போதும் தேவையான ஒரு வீரர் இருக்கிறார். ஆனால் அவரை வாங்கமுடியாது. டோனிதான் அந்த வீரர்” என தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, “நான் ஐ.பி.எல். ஆரம்பிக்கும் போது ஒரு டோனி ரசிகை அல்ல. ஆனால் கடந்த 10 வருடங்களாக அவரின் வளர்ச்சியை பார்த்து, அவரின் ரசிகையாக மாறியுள்ளேன்.

கடந்த வருடம் டோனியை பார்த்த பலர் அவர் ஓய்வுபெறவேண்டும் என தெரிவித்தனர். ஆனால் இந்த வருடத்தில் அவரின் வருகை அனைவருக்கும் பதிலடி கொடுத்திருக்கும். அவர் யார் என்பதை, டோனி மக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் டோனி யார் என்பதை மக்கள் அறிவர்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

<<Tamil News Group websites>>