(plane emergency landed mattala airport)
இன்று அதிகாலை மத்தலையில் தரையிறங்கிய விமானம் : அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு
ஓமானின் – மஸ்கட் நகரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை நிலவிய அதிக மழை காரணமாக மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க வந்த விமானம் அதிகாலை 5.20 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள நிலையில் , பின்னர் காலை 6.30 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 6.47க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விமானத்தில் 130 பேர் பயணித்திருந்தாக அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:plane emergency landed mattala airport,plane emergency landed mattala airport,