பல வருடங்களின் பின்னர், பிரான்ஸில் மின்னல்களின் தாக்கம் அதிகரிப்பு!

0
375
lightning impact increase France afterr 2000

18 வருடங்களுக்குப் பின்னர், இவ்வருட மே மாதத்தில் அதிகபட்ச மின்னல்கள் பதிவாகியுள்ளதாக பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன், ஒரு மாதத்தில் பதிவாகும் அதிகபட்ச மின்னல்களும் இதுவாகும். lightning impact increase France afterr 2000

இவ் வருட மே மாதத்தில் மட்டும், இதுவரை 155,000 தடவைகள் மின்னல்கள் தாக்கியுள்ளன. இதற்கு முன்னதாக அதிகூடிய பதிவாக, 2000-ம் ஆண்டில் 150,000 மின்னல்களுக்கு மேல் தாக்கியுள்ளன.

அதன் பின்னர் அதிக பட்சமாக 2009 ஆம் ஆண்டின் மே மாதத்தில் 84,000 தடவைகள் மின்னல்கள் தாக்கியுள்ளன. இந்த மொத்த மின்னல்களின் எண்ணிக்கைகளை தற்போது 2018 ஆம் ஆண்டு மே மாத மின்னல்கள் முறியடித்துள்ளது.

மேலும், இந்த மின்னல் தாக்குதல்களினால், Bordeaux திராட்சைத் தோட்டத்தில் 5 வீதமானவை அழிந்துள்ளன. 7,100 ஹெக்டேயர்கள் அளவுள்ள திராட்சை தோட்டம் சேதமடைந்துள்ளன.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**