ஒருநாள் தரப்படுத்தலில் உள் நுழைந்த புதிய அணிகள்!!! : ஐசிசியின் புதிய மாற்றம்!!!

0
505
icc odi ranking released today 2018 news Tamil

(icc odi ranking released today 2018 news Tamil)

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிடும் ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் புதிதாக நான்கு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஐசிசி வெளியிட்டு வரும் ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் வழமையாக 12 அணிகள் பெயரிடப்படும். எனினும் இம்முறை வெளியிடப்பட்டுள்ள புள்ளிப்பட்டியலில் மேலும் நான்கு அணிகள் சேர்த்து மொத்தமாக 16 அணியகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி புதிய தரப்படுத்தல் பட்டியலின் படி 13ம், 14ம் இடங்களை முறையே ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் பிடித்துள்ளது. எனினும் 15ம், 16ம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இடங்களை பிடிப்பதற்கு நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகள் இன்னும் நான்கு போட்டிகளில் விளையாட வேண்டும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் தரவரிசை பட்டியலின் முதலிடத்தை இங்கிலாந்து அணி பிடித்துள்ளதுடன், இரண்டாவது இடத்தை இந்தியாவும், மூன்றாவது இடத்தை தென்னாபிரிக்காவும் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இலங்கை அணி 7வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரவரிசைப்பட்டியல்…!

<<Tamil News Group websites>>