படுதோல்வியுடன் வெளியேறினார் டிமிட்ரோவ்!

0
650
french open 2018 Fernando Verdasco news Tamil

(french open 2018 Fernando Verdasco news Tamil)

பிரன்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறியுள்ளார்.

உலக தரவரிசையில் 5ம் இடத்தை பிடித்திருக்கும் டிமிட்ரோவ், ஸ்பெயினின் 35ம் நிலை வீரரான பெர்னாண்டோ வெர்டெஸ்கோவை எதிர்கொண்டு விளையாடினார்.

போட்டியின் ஆரம்ப செட்டில் கடுமையான போராடி தோல்வியடைந்த டிமிட்ரோவ், அடுத்த இரண்டு செட்களிலும் படுதோல்வியடைந்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் செட்டில் வெர்டெஸ்கோ 7-6 என முன்னிலைப்பெற்று செட்டை சமனிலைப்படுத்தினார். அதேபோன்று வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கரிலும் சிறப்பாக ஆடிய வெர்டெஸ்கோ 7-4 என செட்டை கைப்பற்றி 1-0 என முன்னிலைப்பெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெர்டெஸ்கோ 6-2, 6-4 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

போட்டியில் தோல்வியடைந்த டிமிட்ரோவ் பிரன்ச் ஓபனை விட்டு வெளியேறினார்.

<<Tamil News Group websites>>