சடலத்தை வைத்து வியாபாரம் செய்யும் வைத்தியசாலை ஊழியர் – இலவச அமரர் சேவைக்கு அவதூறு

0
506
Relaxation dead bodies deceased Akkaraipattu Resource Hospital

(Relaxation dead bodies deceased Akkaraipattu Resource Hospital)

அக்கரைப்பற்றில் முற்றிலும் இலவச அமரர் ஊர்தி சேவை உள்ளது.

இதனூடாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணிப்பவர்களின் சடலங்களை உறவினர்கள் சிரமமின்றி வீட்டுக்கு கொண்டு செல்ல அல்லது தூர இடங்களுக்கு இலகுவாக கொண்டு செல்லும் நோக்கில் அக்கறைப்பற்றை சேர்ந்த ஒரு செல்வந்தரால் இந்தச் சேவை ஆராம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

சகோதரர் ஜனுன் என்பவரின் முகாமையின் கீழ் இலவச ஜனாஸா சேவை வழங்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆனால் சில மாதங்களாக இந்த இலவச அமரர் ஊர்தி சேவை வைத்தியசாலை பிரேத அறை பொறுப்பாளரால் பொது மக்களுக்கு பொய்யான காரணங்கள் கூறி மறுக்கப்படுவதுடன் அவரால் வாடகை வாகனம் (அவருடைய வேன்) ஏற்பாடு செய்யப்பட்டு அதிக பணம் அறவிடப்படுவதாக பொதுமக்களால் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மாத்திரம் நான்கு தடவை வாகன சேவை தொடர்பாக பொது மக்களுக்கு பொய்யான தகவல் கூறப்பட்டு அதிக கட்டணத்தில் அவரின் சொந்த வாகனம் வரவழைக்கப்பட்டு சடலங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

ஆனால் நேற்று நடந்த சம்பவம் மிகவும் வேதனையானது ஒரு ஏழை நோயாளி மரணித்துள்ளார்.

அவரின் உடலை கொண்டு செல்ல அவரின் வறிய உறவினர் குறித்த பிரேத அறை பொறுப்பாளர் ஊடாக இலவச வாகனத்தை அழைத்துள்ளார்.

பின்னர் பிரேத அறை பொறுப்பாளர் நுழைவாயில் பாதுகாப்பு ஊழியரிடம் இலவச அமரர் ஊர்தி வந்தால் மரணித்தவரை அவசரமாக கொண்டு சென்று விட்டார்கள் என கூறும் படி அறிவுறுத்தியுள்ளார்.

வாகனம் வந்த போது பாதுகாப்பு ஊழியர் அவ்வாறே கூற அமரர் வாகனம் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளது.

பிரேத அறை பொறுப்பாளர் தனது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார். இலவச அமரர் சேவை வழங்குனரை திட்டி விட்டு. வாடகை வாகனம் பிடித்து தருகிறேன் என கூறி உயர்ந்த கட்டணத்தில் வாகனத்தை அழைத்து பிரேதத்தை ஏற்றி அனுப்பியுள்ளார்.

மரணித்தவரின் ஏழை உறவினர் இலவச அமரர் வாகன சேவையாளருக்கு கையடக்க தொலை பேசியில் ஏமாற்றியதற்காக அவரை திட்டுவதற்கு ஆரம்பித்த போதே உண்மை வெளியில் வந்துள்ளது.

இதுதொடர்பாக வைத்தியசாலை அத்தியட்சகரிடம் சகோதரர் ஜுனுன் முறையிட்ட போது இலவச அமரர் வாகன சேவை பற்றி அவதூறாக கூறிய அவர் வைத்தியசாலை பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள இலவச அமரர் சேவை விளம்பர பலகையை கழற்றி கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதன் காரணமாக சகோதரர் ஜனூன் கவலையடந்து இனி எளுவெட்டுவான் வைத்தியசாலைக்கு அமரர் வாகன சேவை செய்வதில்லை என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது, அவரிடம் நிறைய ஆதாரம் உள்ளதாக கூறினார்.

எனவே, பிரதேச மக்கள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் சேவையை முன்னெடுக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Relaxation dead bodies deceased Akkaraipattu Resource Hospital)

More Tamil News

Tamil News Group websites :