{ effects eating artificially mangoes }
பழங்கள் அதிகளவில் கிடைக்கும் காலம் என்பதால் விற்பனையில் அதிக இலாபம் பெறுகின்றனர் வியாபாரிகள். இவர்கள் இரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கின்றது.
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் இதோ..
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், மாதுளை, கொய்யா, சீத்தா… என நமக்காகக் கொட்டிக்கிடக்கின்றன விதவிதமான பழங்கள். இரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கின்றது.
கல்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன.
இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகின்றது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எல்லாவற்றையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள்.
செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களில் அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும். அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
கல்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் (Carcinogenic) உண்டாவதற்கான வாய்ப்புண்டு. எனவே, வாங்கும்போது கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
Tags: effects eating artificially mangoes
<< RELATED HEALTH NEWS >>
*உடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்?
*கோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா?
*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…!
*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…!
*உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை மட்டும் சாப்பிடாதீங்க…!