மே.தீவுகள் – உலக பதினொருவர் அணிகள் இன்று மோதல்…!

0
846
West Indies vs World XI 2018 news Tamil

(West Indies vs World XI 2018 news Tamil)

மே.தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான கண்காட்சி இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளியினால் கரீபியன் தீவுகளில் பாதிக்கப்பட்ட ஐந்து மைதானங்களை புனரைமைப்பதற்கு நிதிசேர்க்கும் முகமாக குறித்த கண்காட்சி போட்டித் தொடர் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படவிருக்கிறது.

உலக பதினொருவர் அணியின் தலைமை பொறுப்பை அப்ரிடி ஏற்றுள்ள நிலையில், மே.தீவுகள் அணியை கார்லோஸ் பிராத்வைட் வழிநடத்தவுள்ளார்.

மே.தீவுகளில் அணியின் முன்னணி வீரர்களான கிரிஸ் கெயில் மற்றும் ஒருவருட தடைக்கு பின்னர் களமிறங்கியிருக்கும் என்ரே ரஷல் ஆகியோரும் இந்த போட்டியில் விளையாடுகின்றனர்.

எவ்வாறாயினும் மே.தீவுகள் அணியின் சுனில் நரைன், பிராவோ, டெரன் சமி, பொல்லார்ட் ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை.

இதேவேளை இன்றைய போட்டியில் இலங்கை அணியின் திசர பேரேரா, இந்திய அணியின் தினேஷ் கார்த்திக், மொஹமட் சமி மற்றும் பாகிஸ்தான் அணியின் சொயிப் மலிக் ஆகியோருடன் ரஷீட் கான் அவருடன் நேபாள வீரர் சந்தீப் லெமச்சேன் ஆகியோரும் விளையாடவுள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ள இந்த போட்டி இன்று இரவு 10.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதுடன், ஐசிசி பேஸ்புக் பக்கம் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்புகிறது.

<<Tamil News Group websites>>