கிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை! : காரணம் இதுதான்!!!

0
555
sri lanka cricket board election latest updates

(sri lanka cricket board election latest updates)

இலங்கை கிரிக்கெட் சபை இன்று நடத்தவிருந்த கிரிக்கெட் சபை தேர்தல் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவால் பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் மே 19ம் திகதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கிரிக்கெட் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெறாமல் இருந்ததால் தேர்தலை பிற்போடுமாறு விளையாட்டுத்துறை அமைச்சு பணித்திருந்தது.

எனினும் பின்னர் இம்மாதம் 31ம் திகதி (இன்று) கிரிக்கெட் சபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனினும் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிட்டுள்ள நிஷாந்த ரணதுங்க, தாக்கல் செய்த மனுவுக்கு அமைய எதிர்வரும் 14ம் திகதிவரை கிரிக்கெட் சபையின் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் சபையின் தேர்தல் எப்போது நடக்கும் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

<<Tamil News Group websites>>