கோடிகளில் குவிந்த திருமணப் பரிசுகளை றோயல் தம்பதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

0
603

(Royal Wedding Hari Megan Gifts Worth Seven Million Pounds)

இங்கிலாந்தின் இளவரசர் ஹரி மேகன் திருமணம் கடந்த 19ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது.

இவர்களது திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பரிசுப் பொருட்கள் குவிந்தன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தமது வாழ்த்துக்களை பரிசுப் பொருட்களாக அனுப்பிவைத்திருந்தன.

சுமார் ஏழு மில்லியன் பவுண்ட்ஸ்க்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த பரிசுப் பொருட்கள் பக்கிங்காம் அரண்மனைக்கு வந்திருந்தன.

இந்நிலையில், தமது திருமணத்திற்கு வரும் பரிசுப்பொருட்களை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதாக திருமணத் தம்பதிகள் ஏற்கனவே தீர்ப்பமானித்திருந்தனர்.

ஆனால் திருமணத்திற்கு அழைப்பு விடுக்காமல், வந்து சேர்ந்த பரிசுப் பொருட்களை திரும்பவே அவர்களுக்கு அனுப்புவதற்கு அரண்மனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது விளம்பரத்திற்காக ஓன்று, இதை பக்கிங்காம் அரண்மனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. உடனடியாகவே அனுப்பியவர்களுக்கு அனுப்புமாறு அரச குடும்பத்தார் உத்தரவிட்டுள்ளனர்.

Tag: Royal Wedding Hari Megan Gifts Worth Seven Million Pounds