கோடாரியுடன் மிரட்டிய நபரை சுட்ட பொலிசார்

0
638
police shoot man threatening holding ax, police shoot man threatening, police shoot man, shoot man threatening holding ax, man threatening holding ax, Tamil Netherland news, Netherland Tamil news

(police shoot man threatening holding ax)

புதனன்று காலை 26 வயது நபர் ஒருவரின் காலில் பொலிசார் சுட்டனர். இவர் தொடர்மாடி குடியிருப்பின் உச்சத்தில் நின்றவாறே கையில் ஒரு கோடாரியை அசைத்துக் கொண்டிருந்தார். அங்கு நின்று அவரை பார்த்து கொண்டிருந்தவர்களின் கூற்றுப்படி, ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தியிருக்கிறார்.

அந்நபர் பற்றிய புகாரை அடுத்து பகல் 1.30 மணியளவில் அந்த குடியிருப்பிற்கு சமூகமளித்த பொலிசார் அந்நபரை அமைதி படுத்த பல மணி நேரம் முயன்றும், அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. அந்நபர் SWAT அணியைத் தாக்கி, அங்கிருந்த ஒரு பொலிஸ் நாயை மோசமாக காயப்படுத்தினார். இதன் போது, ஒரு அதிகாரி அவரை காலில் சுட்டார். போலீஸ் நாய் அதன் காயங்களால் இறந்து போனது.

சந்தேக நபரை பொலிசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பொலிசார் தற்போது அவரது கணினிகளை சோதித்து அவரைப் பற்றி மேலும் அறிய முற்படுகின்றனர்.

அந்நபர் சிரிய நாட்டை சேர்ந்தவர் என்றும், கடந்த ஆண்டு முதல் அவரது தந்தையுடன் இணைந்து இந்த குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார் என தெரிய வந்துள்ளது.

police shoot man threatening holding ax, police shoot man threatening, police shoot man, shoot man threatening holding ax, man threatening holding ax, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites