மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!

0
995
Mahathir political career movie, malaysia tami news, malaysia, malaysia news, Mahathir,

{ Mahathir political career movie }

மலேசியா; பிரதமர் மகாதீர் முகம்மது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதவியேற்றதைத் திரைப்படமாகத் தயாரிக்கத் திட்டமிடுவதாக பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ராமன் குமார் அறிவித்துள்ளார்.

“மலேசியாவின் மீட்பர் மகாதீர்” என்று அந்தத் திரைப்படத்துக்குப் பெயரிட அவர் எண்ணம்கொண்டுள்ளார்.

ஹிந்தியில் தயாராகும் படத்தைப் பின்னர் மலாய், ஆங்கிலத்திலும்
மொழிமாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

டாக்டர் மகாதீரின் இயல்பான அறிவு, ஞானம், அரசியல் அனுபவம் ஆகியவை ஊழலுக்கு எதிரான பிரசாரத்தில் கைகொடுத்து அவர் பொதுத் தேர்தலில் வெற்றிபெற எவ்வாறு வகைசெய்தன என்பதில் திரைப்படம் கவனம் செலுத்தும் என்று திரு. ராமன் குமார் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை டாக்டர் மகாதீர் அந்தத் திரைப்படத்தில் தோன்றினால் அது அவருக்கு முதல் அனுபவமாக இருக்காது.

ஏற்கனவே, 2015ஆம் ஆண்டு, “காப்ஸூல்”(Kapsul) எனும் மலேசியத் திரைப்படத்தில் அவர் டாக்டர் மகாதீராகவே இடம்பெற்றிருந்தார்.

தமது 90ஆவது வயதில் அந்த அறிவியல்-புனைவு, வரலாற்றுத் திரைப்படத்தில் டாக்டர் மகாதீர் பங்கேற்றார் என நம்பப்படுகின்றது.

Tags: Mahathir political career movie

<< RELATED MALAYSIA NEWS>>

*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!

*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!

*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!

*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!

*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!

*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

<< RELATED MALAYSIA NEWS>>