பிரான்ஸில், நடைபாதைகளிலிருந்து அகற்றப்படும் புலம்பெயர்ந்தோர்!

0
535
France riot police cleared 1000 refugees

பிரெஞ்சு கலகப் பிரிவு பொலிஸார் பாரிஸிலுள்ள மிகப்பெரிய தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த 1,000 க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளை அங்கிருந்து அகற்றியுள்ளனர். நேற்று புதன்கிழமை, நூற்றுக்கணக்கான வீடற்ற மக்கள் தற்காலிக முகாம்களுக்கு பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டனர். France riot police cleared 1000 refugees

பாரிஸின் வடக்கு பகுதியில் 2,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள், பாலங்கள் மற்றும் கால்வாய்களின் கீழ் நடைபாதைகள் மீது வசிக்கின்றனர்.

Porte de la Chapelle பகுதியிலுள்ள கால்வாய் பக்கத்திலுள்ள தெருக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தூங்குகிறார்கள். இவர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும், குடிவரவு விடயத்தில் உறுதியாகவும், நியாயமாகவும் செயற்பட விரும்புவதாக ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனாலும், குடியேற்றவாசிகள் மீதான இறுக்கமான விதிகளை கொண்ட சட்டமூலமொன்றுக்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குடியேற்றவாசிகள் தொடர்பான பிரான்ஸின் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**