துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

0
640
Iftar show hosted Thoppu Muslim Association Dubai Tamil news

Iftar show hosted Thoppu Muslim Association Dubai Tamil news

​41 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் சார்பில், 7ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி தேரா துபாய் முதீனா பகுதியில் அமைந்துள்ள கிரேண்ட் எக்ஸல்சியர் ஹோட்டல் வளாகத்தில் சிறப்புடன் நடந்தேறியது.
தோப்புத்துறையின் முஸ்லிம் சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ஏ. எம். ஒய். சகாபுதீன் தலைமை ஏற்றிருந்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக ஜெ.ஜெமீஷா அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க சங்கத்தின் செயலாளர் எம். ஜெ. அவுளியா முகம்மது வரவேற்புரையாற்றினார். எம். முகம்மது கௌது, ஜே. பி. ஜமால் மெய்தீன் மற்றும் பி. எஸ். சிராஜுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் ஈமான் சங்கத்தின் தலைவர் PSM.ஹபிபுல்லாஹ் மற்றும் ​நிர்வாகிகள் ​முகம்மது யாசீன் , முதுவை ஹிதாயத் அவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர் ​. கீழக்கரை பிரமுகர்கள் அல்ஹாஜ் ஹமீத் ஜுபைர், சென்னை எலைட் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி சதக் அன்சாரி, சென்னை கிரசெண்ட் கல்லூரியின் பொருளாளர் ​அசன் தம்பி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஏறக்குறைய 450 அமீரக வாழ் தோப்புத்துறைவாசிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியினை, எம். ஜே. அபுல்ஹசன் தொகுத்து வழங்கினார்.

Iftar show hosted Thoppu Muslim Association Dubai Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை