தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!

0
853
Jamal Younas underground malaysia tami news, malaysia, malaysia news, Jamal Younas,

{ Jamal Younas underground }

மலேசியா: அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ் வாக்குமூலம் அளிப்பதற்கு நேற்று தாம் போலீஸ் நிலையத்திற்குச் செல்லாத காரணத்தை வீடியோ பதிவின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

7 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோ பதிவில் ஜமால் யூனோஸ் ஒரு செம்பனை தோட்டத்திலிருந்து பேசியுள்ளார். அதிகாரிகள் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தினால் தாம் போலீஸ் நிலையத்திற்குச் செல்லவில்லை என்று அவர் அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், எனது பெயரை கருப்பு பட்டியலிலிட்டு தேசிய போலீஸ் படையின் சிறப்பு பாதுகாப்பில் நான் வைக்கபட்டிருக்கும் நடவடிக்கை எனக்கு வருத்தத்தை அளிக்கின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அதே வேளையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எனது வீடு, அலுவலகங்கள் உட்பட இதர இடங்களை சோதனையிட்டதோடு, நேற்று முன்தினம் தொடங்கி நேற்று இரவு வரையில் எனது தாயாரின் வீட்டையும் நண்பர்களின் வீட்டையும் சோதனையிட்டுள்ளனர். இவை அனைத்தையும் பார்க்கும்போது எனக்கு வேதனையை அளிக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

தாம் அம்பாங் போலீஸ் நிலையத்திற்கு வருவதாக வாக்குறுதியளித்திருந்தாலும் இம்மாதிரியான செயல்கள் தமக்கு தடையாக இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அம்பாங் போலீஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் வருவதாக ஜமால் யூனோஸ் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், அவர் இதனைச் செய்யத் தவறியுள்ளார்.

ஓர் அரசியல் தலைவரும் சமூக தலைவருமான தனக்கு எதிராக தீங்கு விளைவிக்கப்படாமல் இருப்பதற்கு உத்தரவாதம் வழங்க்கபடி உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் துன் மகாதீர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் அவரது நண்பர்களையும் அச்சுறுத்திய நிலைமைதான், இன்று எனக்கும் ஏற்பட்டிருப்பதாக நான் உணர்கின்றேன் என்று ஜமால் விவரித்துள்ளார்.

நான் தீவிரவாதியல்ல. ஆனால், நான் தீவிராவாதி மற்றும் பயங்கரவாதி போன்று நடத்தப்படுகின்றேன் என்றார் அவர். ஜமால் யூனோசின் வழக்கு 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் பிரிவு 34 கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Jamal Younas underground

<< RELATED MALAYSIA NEWS>>

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!

*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!

*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!

*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!

*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

<< RELATED MALAYSIA NEWS>>