இளைஞனின் செயல் : அமெரிக்காவே ஆடிப்போனது……

0
709
Canada Tamil News, US News

கனேடிய இளைஞன் ஒருவர் தொடர்ச்சியாக செய்து வந்த செயலிலால் கலங்கிப்போன அமெரிக்கா அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. Canadian Youth Hacking Senetenced

இச்செய்தியின் முழு விபரம்:

இணைய ஊடுருவலில்(ஹெக்கிங்) ஈடுபட்ட கனேடிய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இணைய ஊடுருவல், பொருளாதார உளவுபார்த்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கனேடியரான கரீம் பரடோ கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹமில்ட்டனில் வைத்து கைது செய்யப்பட்டு, அமெரிக்க அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்.

யாஹூ இணையத்தளத்தில் ஊடுருவலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை தற்போது அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றில் நேற்றைய நாள் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, 23 வயது கனேடியரான கரீம் பரடோவுக்கு 2,50,000 டொலர்கள் தண்டமும் விதித்துள்ளது.

இந்த இளைஞர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளித்துள்ள அமெரிக்க விசாரணை அதிகாரிகள், குறித்த கனேடியர் தன்னை அறியாமலே ரஷ்ய உளவாளிகளுக்கு பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளனர்.

குறித்த அந்த இளைஞர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவ்வாறான இணைய ஊடுருவல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை ஊடுருவுவதற்காக அவர் 100 டொலர்கள் வரையில் அறவிட்டு வந்துள்ளதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு அனைத்துலக அளவில் இணைய ஊடுருவலை இவர் வருமானத்திற்கான தொழிலாக மேற்கொண்டுவந்த நிலையில், இவரை அறியாமலேயே ரஷ்ய உளவாளிகள் பலதடவைகளில் இவரை பணம் கொடுத்துப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும், ரஷ்ய அரச உளவு நிறுவனம் இவருக்கு பலமுறை பணம் செலுத்தியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்