இம்முறை இவர்கள் பிக்-பாஸ் சீசனுக்கு வந்தால் மருத்துவ முத்தம் உறுதி!

0
612

(Bigg Boss Contestant Rumour Maruththuva Muththam)

கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் இலகுவில் மறந்து விட மாட்டார்கள். கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இறுதியில் ஆரவ் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்திருந்தார்.

இம்முறை நடக்க விருக்கும் பிக் பாஸ் சீசனுக்கு யார் யார் எலாம் வரவிருக்கிறார்கள் என்ற ஆவல் அதிகரித்த வண்ணம் உள்ளது..

இந்நிலையில் கடந்த சீசனில் பிரபலமான மருத்துவ முத்தம் இம்முறையும் நிகழுமா? அப்படி நடந்தால் யார் யாருக்கு இடையில் நடக்கும்? என்ற ஆவலும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

ஏன் என்றால் மருத்துவ முத்தம் என்றாலே ஞாபகம் வருவது ஓவியாவும் ஆரவ் உம் தான். இவர்கள் போட்டி ஆரம்பித்து சில நாட்களிலேயே ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து போட்டியின் நடுவில் முத்தங்கள் பரிமாறி, இறுதியில் பிரிந்து சென்றதை யாரும் மறந்து விட மாட்டார்கள்.

இந்நிலையில் இம்முறையும் அவ்வாறான ஒரு ஜோடி நிகழச்சிக்கு வருமா என்ற கேள்வி பலரின் மத்தியில் எழுந்திருக்கிறது. இப்போதைக்கு அவ்வாறான ஒரு காதல் ஜோடி என்றால் ஆர்யா அபர்ணதி தான்.

அந்தளவு இருவருக்கும் இடையில் மிகவும் அன்னியோன்யம் இருக்கும் நிலையில் அபர்ணதி பிக் பாஸுக்கு வருவது உறுதியான நிலையில் ஆர்யாவும் வந்தால் கிசு கிசுவுக்கு குறை இருக்காது.

Tag: Bigg Boss Contestant Rumour Maruththuva Muththam