இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு! : விலகுகிறார் முன்னணி வீரர்!

0
546

(Ben Stokes hamstring scare injury news Tamil)

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டித் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டயாத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி தற்போது மற்றுமொரு சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னணி சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற களத்தடுப்பு பயிற்சியின் போது, ஸ்டோக்ஸ் தசைப்பிடிப்பு உபாதைக்கு உள்ளாகியுள்ளதால், நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இவருக்கு பதிலாக 19 வயதான இளம் வீரர் செம் கரனை இங்கிலாந்து அணி பெயரிட்டுள்ளது.

இதன்படி நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் செம் கரன் களமிறங்குவார் எனவும், இந்த மாற்றமானது இங்கிலாந்து அணிக்கு மற்றுமொரு பின்னடைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<Tamil News Group websites>>