சவுதிக்கு தடை விதித்த கட்டார் -அரசின் அதிரடி

0
694
Qatar band Saudi Arabian produces Tamil news

Qatar band Saudi Arabian produces Tamil news

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக கட்டார் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கட்டாருடன் ஆன அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டன.

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்யவில்லை என கத்தார் மறுத்தது. இருந்தாலும் அதை ஏற்காமல் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக நடந்து கொண்டன.

எனவே, தங்களுக்கு வேண்டிய உணவு பொருட்களை துருக்கி, மொராக்கோ, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கட்டார் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி முதல் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளின் பொருட்கள் நேரடியாக இறக்குமதியாகாமல் வேறு நாடுகளின் வழியாக கட்டாருக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதை அறிந்த கட்டார் அரசு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் மற்றும் எகிப்து நாடுகளின் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

அதிகாரிகள் கடைகள் தோறும் சென்று அந்நாட்டு பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை செய்கின்றனர். மீறி விற்கப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள

(Qatar band Saudi Arabian produces Tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை