உளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி!

0
745
not give information Chief Minister intelligence - Geeta Jeevan questioned

not give information Chief Minister intelligence – Geeta Jeevan questioned

தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள், கடந்த 22ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி கலந்துகொண்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் இது ஒரு தன்னெழுச்சியான மக்களின் போராட்டமே தவிர தி.மு.க. உட்பட எந்த அரசியல் கட்சியும் தூண்டிவிட்டு நடத்திய போராட்டம் அல்ல என கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார். காவல்துறை மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், நடந்த நிகழ்வுகள் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைப்பதா, அல்லது தெரிந்து கொள்ளும் அளவிற்கு உளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல்களை கொடுப்பதில்லையா என்ற கேள்வி தனக்குள் எழுவதாகவும் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :